வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 22 நவம்பர் 2021 (08:24 IST)

இந்தியா – சிங்கப்பூர் விமான சேவை தொடக்கம்; இந்த விமானத்தில் போனா ரூல்ஸ் கிடையாது!?

இந்தியா – சிங்கப்பூர் இடையே விமான சேவை தொடங்கப்படும் நிலையில் வி.டி.எல் சிறப்பு விமானத்தில் சென்றால் கொரோனா தனிமைப்படுத்தல் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முதலாக சிங்கப்பூர் – இந்தியா இடையே விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் விமான சேவைகள் தொடங்கப்பட உள்ளன. இந்நிலையில் “தடுப்பூசி பயண பாதை” என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்களை இயக்க இருநாடுகளுக்கு இடையே ஒப்பந்தமாகியுள்ளது.

இந்த சிறப்பு விமானங்கள் வருகிற 29ம் தேதியிலிருந்து சென்னை, டெல்லி, மும்பையிலிருந்து சிங்கப்பூருக்கு தினமும் 6 விமானங்கள் இயக்கப்பட உள்ளன. இதில் பயணிக்கும் பயணிகளுக்கு கட்டாய கொரோனா தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்படும். இதுதவிர வி.டி.எல் அல்லாத விமானங்களும் செயல்படும். ஆனால் அதில் பயணிப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை, கட்டாய தனிமைப்படுத்தல் உண்டு என கூறப்பட்டுள்ளது.