1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. central government decide to invent new petrol

எத்தனால் கலந்த புதிய பெட்ரோல்!.. விரைவில் வெளியிட ஒன்றிய அரசு திட்டம்!...

petrol diesel
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போரை துவங்கியதால் வளைகுடா நாடுகளில் இருந்து ஈரானின் ஹார்மூஸ் நீரிணை வழியாக கச்சா எண்ணெய் கொண்டு வரும் கப்பல்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.. இதன் காரணமாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.

இந்தியாவின் பல மாநிலங்களிலும் ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் வினியோக சிலிண்டர் கிடைக்காமல் பல ஹோட்டல்கள் மூடப்படும் நிலை ஏற்பட்டது.. அதோடு, இதனால் பல தொழில்களும் பாதிக்கப்பட்டதால் வெளிமாநிலத்தை சேர்ந்த தொழிலாலர்களும் பலரும் வேலையிழந்து தங்களின் சொந்த ஊருக்கு திரும்பி வருகிறார்கள்..

போர் இப்போதைக்கு முடிவது போல் தெரியவில்லை. ஏனெனில் அணு ஆயுதம் உற்பத்தி செய்யக் கூடாது என்கிற அமெரிக்காவின் நிபந்தனையை ஈரான் ஏற்கவில்லை. இதனால் கோபமடைந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் இதை ஏற்காவிட்டால் பலமான தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டி வருகிறார். தற்போதைக்கு போர் நிறுத்தம் நீடித்தாலும் மீண்டும் போர் எப்போது தொடங்கும் என கணிக்க முடியாத நிலை இருக்கிறது.

இந்நிலையில்தான் பெட்ரோலுக்கு பதிலாக மாற்று எரிபொருளை கண்டுபிடிக்கும் செயலில் ஒன்றிய அரசு இறங்கியிருக்கிறது. இந்தியாவில் 85 சதவீதம் எத்தனால் மற்றும் 15 சதவீத பெட்ரோல் கலந்த E85 எரிபொருளை அறிமுகம் செய்ய புதிய வரைவு விதிகளை விரைவில் வெளியிட ஒன்றிய அரசு திட்டமிட்டிருக்கிறது. அதேநேரம், E85 எரிபொருளுக்காகவே பிரத்யோகமாக தயாரிக்கப்படும் Flex Fuel வாகனங்கள் மட்டுமே இதை பயன்படுத்த முடியும்.. ஏற்கனவே நாடு முழுவதும் E20 பெட்ரோல் புழக்கத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது..
அடுத்த கட்டுரையில்
விமான கட்டணம் திடீர் உயர்வு!.. ஓட்டு போட சொந்த ஊருக்கு போறவங்க ஷாக்!..