திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 23 ஜூன் 2018 (16:29 IST)

கர்நாடக பிரதிநிதியை நியமித்த மத்திய அரசு: கடுப்பில் குமாரசாமி!

நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும், இன்னும் காவிரி ஆணையம் அமைக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வரவில்லை. காவிரி வாரிய தலைவர் அறிவிக்கப்பட்டு, தமிழக உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்ட பின்பும், கர்நாடக அரசு தனது தரப்பு உறுப்பினர்களை அறிவிக்காமல் இருந்தது. 
 
ஆனால், கர்நாடக மாநிலத்தில் பெய்த அதிக மழையால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், கர்நாடக அரசு தங்களது பிரதிநிதியை அமைக்காத காரணத்தால் பொருத்திருந்த மத்திய அரசு, இன்று காவிரி ஆணையத்தின் கர்நாடக பிரதிநிதியை நியமித்தது. 
 
ஆனால், இதற்கு குமாரசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். குமாரசாமி கூறியது பின்வருமாறு, காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. காவிரி ஆணையத்தில் உள்ள சில சிக்கல்களுக்கு தீர்வுகாண வேண்டும் என மத்திய அரசிடம் கேட்டிருந்தோம். 
 
ஆனால், மத்திய அரசு கர்நாடகாவை புறக்கணித்து நடவடிக்கை எடுத்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணைய விவகாரத்தில் கர்நாடகா சட்ட ரீதியாக போராட்டம் நடத்தும் என்றார். இதனால், காவிரி விவகாரத்தில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.