வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 23 ஜூன் 2018 (11:42 IST)

கர்நாடகத்தில் பாஜக பிரமுகர் சரமாரியாக வெட்டிக்கொலை

கர்நாடகாவில் பா.ஜ.க. நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் சிக்மகளூரைச் சேர்ந்தவர் அன்வர்(44). இவர் சிக்மகளூர் புறநகர் பா.ஜ.க. பொதுச்செயலாளராக பதவி வகித்து வந்தார். இவர் சமீபத்தில் கர்நாடகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சிக்காக பல பணிகளை மேற்கொண்டார்.
 
இந்நிலையில் அன்வர் நேற்றிரவு கவுரி கால்வாய் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், அன்வரை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினர். ரத்தவெள்ளத்தில் கீழே சரிந்த அன்வர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.
 
இதையடுத்து தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் அன்வரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்துள்ள போலீஸார் கொலைக்கான காரணம் குறித்தும், கொலையாளிகள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.