கர்நாடக தேர்தலில் பேஸ்புக் தலையீடு? உறுதிமொழி கேட்ட மத்திய அரசு
கர்நாடக மாநிலத்தில் நடைபெற உள்ள தேர்தலில் பேஸ்புக் மூலம் முறைகேடு நடக்கிறதா என்று மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது.
கேம்பிரிட்ஜ் அனலெட்டிகா நிறுவனம் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் தகவல்களை அவர்களின் அனுமதியின்றி சோதனை செய்தது பெரிய சர்ச்சையாக வெடித்தது. இதையடுத்து தகவல்கள் திருடப்பட்டதை ஒப்புக்கொண்ட மார்க், இனி இதுபோன்ற தவறுகள் நடக்காது என்று தெரிவித்து இருந்தார்.
இந்தியாவில் நடந்த தேர்தல்களிலும் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது. மார்க் சில நாட்களுக்கு முன் இந்தியாவில் நடக்க உள்ள தேர்தலில் எந்த முறைகேடும் நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் நாடாளுமன்ற நிலைக்குழுவும், பாஜக கட்சியும் பேஸ்புக்கிடம் உறுதிமொழி வாக்குமூலம் அளித்து இருக்கிறது. அதன்படி பேஸ்புக் தற்போது மத்திய அரசிடம் உறுதிமொழி வாக்குமூலம் அளித்து இருக்கிறது. கர்நாடக தேர்தல் முதல் இந்தியாவில் நடக்கும் எந்த தேர்தலிலும் முறைகேடு செய்ய மாட்டோம் என்று கூறியுள்ளது.