திங்கள், 24 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 24 மார்ச் 2025 (11:16 IST)

பெண் குழந்தை பிறந்தால் அதிகாரிகள் நேரில் சென்று வாழ்த்த வேண்டும்: கலெக்டர் உத்தரவு..!

Girl
தெலுங்கானா மாநிலத்தின் கம்மம் மாவட்ட கலெக்டராக பணியாற்றுபவர் முசம்மில் கான். இவர் சமீபத்தில் பெண்குழந்தையின் பிறப்பை கொண்டாடும் மனப்பாங்கை உருவாக்கி, பெண் குழந்தைகள் பிறப்பின் விகிதத்தை உயர்த்தும் நோக்கில் "பெண் பெருமை" திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
 
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, வீட்டில் பெண் குழந்தை பிறந்தால், அந்த குடும்பத்தினரை நேரில் சந்தித்து வாழ்த்தி, இனிப்பு பெட்டியை வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அன்புடன் உத்தரவிட்டுள்ளார்.
 
அத்துடன், திருநங்கைகள் தன்னம்பிக்கையுடன் வாழ சுய உதவி குழுக்களை உருவாக்கி, கடன் உதவிகளையும் வழங்கி வருகிறார். மேலும், கணவன், மனைவி இருவரும் அரசு ஊழியர்களாக இருந்தால், அவர்கள் குழந்தைகளை கவனிக்கும் வசதியாக கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே சிறப்பு பகல் பராமரிப்பு மையம் அமைத்துள்ளார்.
 
இங்கு குழந்தைகளை பாதுகாக்க தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியர்களை நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva