1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: புதன், 9 ஆகஸ்ட் 2017 (05:20 IST)

பெங்களூர் சிகிச்சையால் பலன்: அகமது பட்டேல் வெற்றி

குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மாற்றி வாக்களிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டதால் அவர்களில் 42 பேர் பெங்களூரில் உள்ள சொகுசு பங்களாவில் தங்க வைக்கப்பட்டனர். இந்த சிகிச்சைக்கு பலன் அளிக்கும் வகையில் காங்கிரஸ் வேட்பாளர் அகமது பட்டேல் நேற்று பெற்றதாக அறிவிக்கப்பட்டார்



 
 
குஜராத் மாநில 3 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு 4 பேர் போட்டியிட்டனர். பாஜக சார்பில் அக்கட்சியின் தேசிய தலைவா் அமித் ஷா, மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி, பல்வந்த் சிங் ஆகியோர்களும், காங்கிரஸ் சார்பில் சோனியாவின் நம்பிக்கைக்குரிய அகமது பட்டேலும் போட்டியிட்டனர்,.
 
இதில் அமித் ஷா, மத்திய ஸ்மிருதி இரானி வெற்றி உறுதி என்றான நிலையில் பல்வீர்சிங்கா? அகமது பட்டேலா? என்ற கேள்வி எழுந்தது. அகமது பட்டேல் வெற்றிக்காகத்தான் பெங்களூரில் எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று இரவு முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் அகமது பட்டேல் 44 வாக்குகள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.