தாவூத் இப்ராஹிமுக்கு மரண அடி கொடுத்த தமிழர்
போதை பொருள் வியாபாரம் என்பது உலக அளவில் இருந்தாலும் இதுவரை மிகப்பெரிய அளவில் போதை பொருட்கள் பிடிபடாததே அவர்களின் வெற்றியாக இருந்தது.
அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறுசிறு அளவில் போதை பொருட்கள் பிடிபடுவதும், அதை கடத்தி வந்த அப்பாவிகள் கைது செய்யப்படுவதுமாக இருந்த நிலையில் முதல்முறையாக ரூ.35000 கோடி அளவில் போதை பொருள் பிடிபட்டுள்ளது. இதை பிடிக்க காரணமாக இருந்தவர் கடலோரக் காவல்படை மேற்கு பிராந்தியத்தின் தலைவராக இருக்கும் நடராஜன் கிருஷ்ணசாமி. இவர் ஒரு தமிழர், சென்னையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத் மாநில கடல் எல்லையில் பிடிபட்ட இந்த கப்பலில் போதை பொருட்களை ஏற்றியது தாவூத் இப்ராஹிம் ஆட்கள் என்று கூறப்படுகிறது.
இந்த கப்பலில் இருந்த 8 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணையில் பால் திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கப்பலில் பிடிபட்ட போதை பொருட்கள் தாவூத் இப்ராஹிம் சரக்கு என்பது உண்மையானால் இது அவருக்கு கிடைத்த மரண அடி என்பதும் அது தமிழரால் ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.