1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 9 பிப்ரவரி 2022 (19:51 IST)

சி.பி.எஸ்.இ. 10, 12 வகுப்புக்கான 2ம் பருவ பொதுத்தேர்வு: அட்டவணை வெளியீடு

கொரோனா வைரஸ் பாதிப்பு நாடு முழுவதும் படிபடியாக குறைந்து வருவதை அடுத்து கிட்டதட்ட அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டன என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் இந்த ஆண்டு பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்றும் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகளில் நேரடியாகவே நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்தநிலையில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் பருவ தேர்வு தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது
 
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு சிபிஎஸ்சி மாணவர்களுக்கு ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் இரண்டாம் பருவத் பொதுத்தேர்வு தொடக்கம் என்றும் இது குறித்த அட்டவணையை www.cbse.nic.in  என்ற இணையதளத்தில் மாணவர்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது