1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. CBSE Class 10, 12 Exam Schedule Released – Full Details Inside!

சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு.. முழு விவரங்கள்..!

சிபிஎஸ்இ
நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10,  12ம் வகுப்பு பொது தேர்வுகள் பிப்ரவரி 15-ம் தேதி தொடங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 2025 பிப்ரவரி 15ந் தேதி தொடங்கி மார்ச் 18 ஆம் தேதி வரை நடைபெறும்  என்றும், 15ஆம் தேதி ஆங்கிலம் , 20 ஆம் தேதி அறிவியல், 27ஆம் தேதி தமிழ் உள்ளிட்ட மொழிப்பாட தேர்வுகள் நடைபெறும்  என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மார்ச் 10 ஆம் தேதி கணிதம், 13ஆம் தேதி ஹோம் சயின்ஸ் தேர்வுகள் நடைபெற உள்ளது என அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் பிப். 15ஆம் தேதி தொழிற்கல்வி பாட தேர்வுகளுடன் தொடங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. பிப். 21ஆம் தேதி இயற்பியல், 24ஆம் தேதி புவியியல், பிப்ரவரி 27ஆம் தேதி வேதியியல் தேர்வுகள் நடைபெறுகிறது. இந்த தேர்வு குறித்து கூடுதல் விவரங்கள் தெரிந்து கொள்ள மாணவ-மாணவிகள் www.cbse.gov.in இணையதளம் சென்று அறிந்து கொள்ளலாம்.

இந்த ஆண்டு சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வை நாடு முழுவதும் சுமார் 44 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.   தேர்வுகள் காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணி வரை நடக்கும். சில தேர்வுகள் காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணி வரை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரம்: ஆனந்தகுமாரின் மனைவியும் கைது..!