1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 23 மே 2024 (06:47 IST)

2024–25-ம் கல்வியாண்டில் சிபிஎஸ்இ-யில் தமிழ் பாட தேர்வு கட்டாயம்: பள்ளி கல்வித்துறை தகவல்

CBSE
2024–25-ம் ஆண்டு கல்வி ஆண்டு முதல் சிபிஎஸ்சி பள்ளிகளில் தமிழ் பாடம் கட்டாயம் என பள்ளி கல்வித்துறை அதிரடியாக அறிவித்துள்ளது 
 
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம் என்ற நடைமுறை இருக்கும் நிலையில் 2024–25-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் செயல்படும் சிபிஎஸ்சி மற்றும் ஐசிஎஸ்இ உள்பட அனைத்து விதமான பள்ளிகளுக்கும் தமிழ் பாடம் கட்டாயம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது
 
சிபிஎஸ்இ முறையில் படிக்கும் மாணவர்களும் பொது தேர்வில் தமிழை ஒரு பாடமாக கட்டாயம் எடுத்து தேர்வு எழுத வேண்டும் என்றும் தேர்வு முறை மற்றும் பாடத்திட்டம் விரைவில் வெளியிடப்பட உள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது
 
 சமீபத்தில் பள்ளி கல்வித்துறை மேற்கொண்ட ஆய்வின்படி சிபிஎஸ்சி பள்ளிகளில் 6000 பேர்கள் மட்டுமே 6000 பேர் வரை தமிழ் மொழி படிக்காத மாணவர்களாக இருப்பாதாக கூறப்பட்டதை அடுத்து பள்ளிக்கல்வித்துறை இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு வரவேற்பு குவிந்து வருகிறது. 
 
Edited by siva