தொடர்புடைய செய்திகள்
- 2024–25-ம் கல்வியாண்டில் சிபிஎஸ்இ-யில் தமிழ் பாட தேர்வு கட்டாயம்: பள்ளி கல்வித்துறை தகவல்
- 12ஆம் வகுப்பை அடுத்து சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு.. தேர்ச்சி விகிதம் எவ்வளவு?
- சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது? புதிய தகவல்..!
- சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் எப்போது? தேர்தலால் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதா?
- 10, 12ம் வகுப்பு வினாத்தாள்கள் முன்கூட்டியே கசிந்து விட்டதா? சிபிஎஸ்இ விளக்கம்
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சிபிஎஸ்இ, ஐசிஎஸ் பள்ளிகள் கிடையாது: தமிழ்நாடு அரசு
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 25% இடஒதுக்கீட்டின் கீழ் சிபிஎஸ்இ, ஐசிஎஸ் பள்ளிகளை சேர்க்க இயலாது என தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
சிபிஎஸ்இ, ஐசிஎஸ் பள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசு கட்டணம் நிர்ணயிப்பதில்லை என்பதால் அந்த பள்ளிகளை 25% இடஒதுக்கீட்டில் சேர்க்க இயலாது என தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் காரணமாக கூறியுள்ளது.
25% இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் போது, ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் வசிக்கவில்லை எனக் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக கோவையைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் தாக்கல் செய்த வழக்கில் தான் தமிழ்நாடு அரசு இந்த பதிலை கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழை குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். இத்திட்டத்தில் எல்கேஜி அல்லது 1-ம் வகுப்பில் சேர்பவர்கள் 8-ம் வகுப்பு வரைகட்டணம் செலுத்தாமல் இலவசமாக படிக்கலாம். இந்த நிலையில் இந்த திட்டத்தில் சிபிஎஸ்இ, ஐசிஎஸ் பள்ளிகளை சேர்க்க இயலாது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
Edited by Siva
