வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 15 பிப்ரவரி 2024 (07:02 IST)

சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது.. தயாராகும் 10,12-ம் வகுப்பு மாணவர்கள்..!

CBSE
நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10, 12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இன்று தொடங்க இருப்பதை அடுத்து பொதுத் தேர்வு எழுத மாணவர்கள் தயாராகி வருகின்றனர்.

சிபிஎஸ்இ  10, 12ம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 15ஆம் தேதி முதல் பொதுத்தேர்வு தொடக்கம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று நாடு முழுவதும் சுமார் 39 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பொது தேர்வை எழுதுகின்றனர்.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் காலை 10 மணிக்கு முன்பே தேர்வு மையங்களுக்கு வர வேண்டும் என சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது. மேலும் இன்று தொடங்கும் பொது தேர்வு ஏப்ரல் இரண்டாம் தேதி வரை நடைபெறும் என்றும் தினமும் தேர்வு காலை 10.30 மணிக்கு தொடங்கும் என்றும் அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு வழிகாட்டும் குறிப்புகள் வழங்க வேண்டும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

10 மணிக்கு மேல் தாமதமாக வரும் மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் எனவே மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வு மையத்துக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Edited by Siva