வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 19 அக்டோபர் 2021 (07:27 IST)

சிபிஎஸ்இ தேர்வு எப்போது? அட்டவணை வெளியீடு

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன என்பதும் மாணவர்களுக்கு பாடங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவ தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அட்டவணையின் படி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு  நவம்பர் 30-ஆம் தேதி முதல் பருவத்தேர்வு தொடங்குகிறது என்றும் அதேபோல் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 1-ஆம் தேதி முதல் பருவத் தேர்வு தொடங்குகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை சிபிஎஸ்சி என அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது