1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 10 மே 2023 (17:41 IST)

சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகள் குறித்த வதந்தி: விளக்கம் அளித்த நிர்வாகம்..!

சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என சமூக வலைதளங்களில் செய்திகள் கசிந்துள்ள நிலையில் இதற்கு சிபிஎஸ்சி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. 
 
கடந்த சில மணி நேரங்களாக சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் நாளை வெளியாக இருப்பதாக சிபிஎஸ்சி அதிகாரபூர்வமாக அறிவித்தது போன்ற ஒரு லெட்டர் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 
 
இந்த நிலையில் சிபிஎஸ்சி நிர்வாகம் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது. சிபிஎஸ்சி நிர்வாகம் வெளியிட்டது போன்ற அறிக்கை உண்மையில் போலியானது என்றும் அதை வெளியிட்டவர் யார் என்று தெரியவில்லை என்றும் சிபிஎஸ்இ நிர்வாகம் அந்த அறிவிப்பை வெளியிடவில்லை என்றும் தெரிவித்துள்ளது. 
 
மேலும் நாளை சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகும் என்பது முழுக்க முழுக்க வதந்தி என்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை அதிகாரப்பூர்வமாக இன்னும் ஓரிரு நாளில் அறிவிப்போம் என்றும் தெரிவித்துள்ளது. 
 
மேலும் சிபிஎஸ்சி பெயரில் போலியாக அறிக்கை தயாரித்த நபரை கண்டுபிடிக்கும் முயற்சியிலும் சிபிஎஸ்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva