திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 10 மே 2023 (17:11 IST)

நடிகர் விஜய்யைப் போல் நடனமாடிய ஜப்பான் ரசிகை..

jappan vijay fan
நடிகர் விஜய்யின் ஜப்பான் நாட்டு ரசிகை ஒருவர் அவரைப் போன்று நடனமாடிய வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர், நடிப்பில், கடந்த  2007 ஆம் ஆண்டு வெளியான படம் அழகிய தமிழ் மகன். இப்படத்தை இயக்குனர் பரதன் இயக்கினார்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்ற  நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற பொன்மகள் வந்தாள், கேளாமல் கையிலே, மதுரைக்குப் போகாதடி, உள்ளிட்ட பாடல்கள் பெரும் வெற்றி பெற்றன.

இப்படத்தின் தொடக்கப் பாடலான எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே என்ற பாடல் ஏ.ஆர்.ரஹ்மான் குரலில் பாடியிருந்தார். தன்னம்பிக்கையூட்டும் பாடலான, இதற்கு வாலி  பாடல் வரிகள் எழுதினார்.  விஜயின் நடனம் பெரும் உத்வேகத்துடன் அமைந்திருந்தது.

இந்த  நிலையில், நடிகர் விஜய்யின் இந்த ஹிட் பாடலுக்கு அவரைப் போல் அவரது ஜப்பான்  நாட்டு ரசிகை ஒருவர் நடனமாடியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.அவரது நடனத்திற்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.