வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 4 மார்ச் 2018 (20:27 IST)

கார்த்தி சிதம்பரத்திடம் விசாரனை முடிந்தது - சிபிஐ

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அந்நிய முதலீடு பெற்ற விவகாரத்தில் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரத்தில் விசாரணை முடிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அந்நிய முதலீடு பெற்ற விவகாரத்தில் முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட காத்திக் சிதம்பரத்தை ஒருநாள் காவலில் எடுத்து விசரரிக்க சிபிஐக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
ஒருநாளில் எந்த வாக்குமூலத்தையும் பெற முடியவில்லை என்று 14 நாட்கள் காவல் வேண்டும் என்று சிபிஐ டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் கோரியது. ஆனால் டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியது. 
 
இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி மற்றும் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் ஆகியோர் வாக்குமூலத்தை முன்வைத்து கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் கார்த்தி சிதம்பரத்தை இந்திராணி முகர்ஜி மற்றும் பீட்டர் முகர்ஜி ஆகியோருடன் நேருக்கு நேர் விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்ததது.
 
அதன்படி மும்பை பைகுல்லா சிறையில் இந்திராணி முகர்ஜி மற்றும் பீட்டர் முகரியுடன் சேர்த்து கார்த்தி சிதம்பரத்திடம் சிபிஐ நடத்திய விசாரணை நிறைவு பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
விசாரணை முடிந்து வெளியே வந்த கார்த்தி சிதம்பரம், தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானது. அரசியல் நோக்கத்தில் தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.