ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 4 மார்ச் 2018 (14:03 IST)

மும்பை சிறையில் இந்திராணி முன் கார்த்திக் சிதம்பரத்தை நிறுத்திய சிபிஐ

ஐஎன்எக்ஸ் மீடியா சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரத்தை இன்று சிபிஐ அதிகாரிகள் மும்பை அழைத்துச் சென்றனர். கார்த்திக்கை மும்பைக்கு ஏன் அழைத்து சென்றனர் என்ற கேள்வி அனைவரின் முன் நின்ற நிலையில் மும்பை சிறையில் உள்ள இந்திராணியை சந்திக்க வைக்கவே கார்த்திக் சிதம்பரம் மும்பை அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

கடந்த மாதம் 28ஆம் தேதி இந்த வழக்கின் விசாரணையின் போது கார்த்திக் சிதம்பரம் தன்னிடம் 10லட்சம் அமெரிக்க டாலர் லஞ்சம் கேட்டதாகவும், அதற்கு தான்  7 லட்சம் அமெரிக்க டாலர் லஞ்சமாக கொடுத்ததாகவும் இந்திராணி, நீதிபதி முன் வாக்குமூலம் கூறியிருந்தார்

இதுகுறித்து விசாரணை செய்யவே மும்பை பைகுல்லா சிறையில் இருக்கும் இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி முன் தனித்தனியாக நேருக்கு நேர் கார்த்தி சிதம்பரத்தை நிறுத்தி விசாரிக்க முடிவு செய்துள்ளதாக சிபிஐ தரப்பினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கார்த்திக் சிதம்பரத்திற்கு அளிக்கப்பட்ட 5 நாள் போலீஸ் காவல் நாளை மறுநாளுடன் முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.