1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 29 மே 2018 (18:16 IST)

மீண்டும் தாமதமாகும் காவிரி செயல்திட்டம்?

மோடியின் வெளிநாட்டு பயணத்தால், ஜூன் முதல் தேதிக்கு முன்பாக அமலுக்கு வரவிருந்த காவிரி செயல்திட்டம் மீண்டும் தாமதமாகும் என தெரிகிறது.  
 
மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த காவிரி திருத்தப்பட்ட வரைவு செயல்திட்டத்தை மே 18 ஆம் தேதி உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. 
 
இந்த செயல்திட்டம் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே அரசிதழில் வெளியிடப்பட்டு அமல்படுத்தப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். ஆனால், தென்மேற்கு பருவமழை துவங்கிவிட்டது. 
 
அனால், தற்போது வரை காவிரி செயல்திட்டமானது இன்னும் அமல்படுத்தப்படவில்லை. அதாவது, இன்று வரை காவிரி செயல்திட்டத்துக்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
 
இந்த வாரம் அமைச்சரவை கூடும் போது இந்த வரைவு செயல்திட்டத்துக்கு ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால், மோடியின் வெளிநாட்டு சுற்றுபயணத்தால் ஒப்புதல் கிடைக்காது என்பது தெளிவாக தெரிகிறது. 
 
இதுகுறித்து மத்திய நீர் வளத்துறை செயலாளர் கூறியதாவது,  புதன்கிழமை அமைச்சரவை கூடாவிட்டாலும் வேறு எந்த வகையிலாவது ஒப்புதல் பெறப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.