1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 28 மே 2018 (15:48 IST)

தமிழக பெண்ணிடம் தோசை கேட்ட மோடி

இலவச எரிவாயு இணைப்பு மூலம் பயனடைந்தவர்களிடம் பேசிய மோடி தமிழக பெண் ஒருவரிடம் தோசை கேட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 
ஏழை மக்களுக்காக மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்படுகிறது. இந்த திட்டம் மூலம் பயனடைந்தவர்களுடன் மோடி இன்று கலந்துரையாடினார்.
 
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ருத்தரம்மா என்ற பெண்ணுடன் பேசினார். மோடி ஹிந்தியில் பேசினார். ருத்தரம்மா தமிழில் பேசினார். மொழி பெயர்ப்பாளர் உதவியுடன் இருவரும் பேசிக்கொண்டனர்.
 
அப்போது மோடி ருத்தரம்மாவிடம், உங்கள் வீட்டுக்கு வந்தால் தோசை சுட்டு தருவீர்களா? என்று மோடி கேட்டுள்ளார்.