வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 15 ஏப்ரல் 2023 (14:23 IST)

சி.ஏ.பி.எஃப் (CAPF) தேர்வு தமிழ் உள்பட 15 மொழிகளில் நடத்தப்படும்- மத்திய அமைச்சர் அமித்ஷா

சி.ஏ.பி.எஃப்(CAPF) எனப்படும் ஆயுதப்படையில் ஆட்களைச் சேகரிப்பதற்கான தேர்வு தமிழ் உள்பட 15  மொழிகளில் நடத்தப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு ஆயுதப் படைகளில் ஆட்களைச் சேர்ப்பதற்கான சி.ஏ.பி.எஃப்(CAPF) தேர்வு  நடத்தப்பட்டு வருகிறது.

இத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இந்தி மொழிகளில் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இத்தேர்வு வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி  நடைபெறவுள்ள நிலையில், இத்தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டுமின்றி, தமிழ் உள்பட 15 மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.