1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 14 ஏப்ரல் 2023 (16:40 IST)

பிரபல நடிகரின் தாயார் மரணம்…சினிமாத் துறையினர் இரங்கல்

jegan
விஜய் தொலைக்காட்சியில் கடவுள்பாதி மிருகம் பாதி என்ற நிகழ்ச்சியில் வித்தியாசமான கெட்டப்பில் தோன்றி ரசிகர்களிடம் பிரபலமானவர் ஜெகன்.

விஜய் டிவி நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பால்,  2005 ஆம் ஆண்டு கண்ட நாள் முதல் படத்தின் மூலம் நடிகராக சினிமாவில் அறிமுகமானார்.

சூர்யாவுடன் அயன், பையா படத்தில் நடிகர் கார்த்திக்குடன் இணைந்து நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

சினிமாவில் நடித்து வந்த போதிலும் விஜய் தொலைக்காட்சியில்  நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில்,  உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெகனின் தாயார் இன்று காலமானார்.

இதுகுறித்து அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்ணீருடன் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அதில், '' கடந்த ஒரு மாதத்திற்கு மேல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த என் தயார் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

என் துக்கத்தில் பங்கேற்று ஆறுதல் கூறிவரும் அனைவருக்கும் என் நன்றி. கடைசி வரை அம்மாவை காப்பாற்ற போராடிய மருத்துவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி'' என்று உருக்கமாக கூறியுள்ளார்.

சினிமா துறையினர் மற்றும் ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.