வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 15 ஏப்ரல் 2023 (11:52 IST)

சற்றே குறைந்தது கொரோனா பாதிப்பு: 24 மணி நேரத்தில் பாதிப்பு எவ்வளவு?

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று முன்தினம் 11 ஆயிரத்தை தாண்டிய நிலையில் நேற்று 10 ஆயிரம் என்ற அளவில் சற்றே குறைந்துள்ளதாக மத்திய சுகாதார துறையை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 10,753 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 53,720 என அதிகரித்துள்ளது.
 
இந்தியாவில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். கடந்த புதன் கிழமை10,158 பேரும், வியாழக்கிழமை,11,109 பேரும் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் கடந்த 24 மணி நெரத்தில் கொரோனா பாதிப்பு சற்றே குறைந்திருக்கிறது.
 
மேலும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 42 லட்சத்து 23 ஆயிரத்து 211 என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran