ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 28 பிப்ரவரி 2024 (08:15 IST)

விளையாட சென்ற சிறுவனை கடித்துக் குதறிய தெரு நாய்கள்! சிறுவன் பரிதாப பலி!

Street Dogs
மத்திய பிரதேசத்தில் தெருவில் விளையாட சென்ற சிறுவனை நாய்கள் கடித்துக் குதறியதில் சிறுவன் பலியான சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.



கடந்த சில காலமாகவே இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தெரு நாய்களால் பொதுமக்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. முக்கியமாக கூட்டமாக திரியும் தெருநாய்களின் சிறார்கள் சிக்கி விடுவது தொடர்கதையாக உள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலம் பத்வானி பகுதியில் இறைச்சி கடைகள் செயல்பட்டு வரும் பகுதியில் ஏராளமான தெருநாய்கள் உள்ளன. அந்த பகுதியில் வசித்து வரும் குடும்பத்தை சேர்ந்த 2 வயது சிறுவன் விளையாடுவதற்காக தெருவுக்கு சென்றபோது அங்கிருந்த தெரு நாய்கள் சிறுவனை சுற்றி வளைத்து கடிக்கத் தொடங்கியுள்ளன.

சிறுவன் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த சிறுவனின் பாட்டி நாய்களை விரட்டி சிறுவனை மீட்டுள்ளார். உடனடியாக சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

இதையடுத்து நாய்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K