வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 13 மார்ச் 2024 (19:33 IST)

சரியான புரிதலில்லாமல் அவசரப்பட்டு அறிக்கை விட வேண்டாம்: விஜய்க்கு கஸ்தூரி அறிவுரை

நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்த பின்னர் சமீபத்தில் முதல் முறையாக அரசியல் குறித்த அறிக்கை வெளியிட்டார் என்பதும் அவரது அறிக்கையில் மத்திய அரசு அமல்படுத்திய சிஏஏ சட்டத்திற்கு எதிராக இருந்தது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

விஜய்யின் இந்த அறிக்கைக்கு முக்கிய அரசியல் கட்சிகள் எந்தவித விமர்சனம் செய்யாத நிலையில் ஒரு சில அரசியல் தலைவர்கள் மட்டும் ஆதரவாகவும் எதிராகவும் விமர்சனம் செய்து வந்தனர்.

இந்நிலையில் விஜய்யின் அரசியல் அறிக்கைக்கு நடிகை கஸ்தூரி அறிவுரை கூறியுள்ளார். அவர் தனது அறிவுரைகள் கூறியிருப்பதாவது:

அன்பிற்குரிய தளபதி விஜய் தன் அரசியல் ஆலோசகர்களை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். சிஏஏ என்பது இஸ்லாமிய அண்டை நாட்டு மதவாதத்திலிருந்து தப்பி வந்தவர்களுக்கு புகலிடம் தரும் மனிதநேய சட்டம். சரியான புரிதலில்லாமல்  அவசரப்பட்டு அறிக்கை விடுவது சரியல்ல.  சொல்ல போனால், ஈழத்தமிழருக்கும்  ...

Edited by Mahendran