பட்ஜெட் தாக்கலில் இதெல்லாம் அவசியம் இருக்கணும்! – ராகுல் காந்தி எதிர்பார்ப்பு!

Prasanth Karthick| Last Modified திங்கள், 1 பிப்ரவரி 2021 (10:48 IST)
இன்று மத்திய அரசு பட்ஜெட் தாக்க செய்ய உள்ள நிலையில் அதில் முக்கியமாக இருக்க வேண்டியவை என ராகுல் காந்தி பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மத்திய அரசின் 2021-2022ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். கொரோனா பாதிப்பிற்கு பிறகு தாக்கலாகும் பட்ஜெட் என்பதால் பலரும் இதை தீவிரமாக எதிர்பார்த்து காத்துள்ளனர்.

இந்நிலையில் பட்ஜெட் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி “ஆண்டு பட்ஜெட் சிறு, குறு நடுத்தர தொழில்கள், விவசாயிகள் மற்றும் பணியாளர்களின் வேலைவாய்ப்பிற்கு ஆதரவு அளிப்பதாக இருக்க வேண்டும். மருத்துவ காப்பீடு அதிகரித்தல் பலரது வாழ்வை காக்க உதவும். நாட்டின் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது எல்லை பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்கும்” என கருத்து கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :