இன்று பட்ஜெட் தாக்கல்; புள்ளிகள் உயர்ந்து வரும் பங்குசந்தை!
இன்று ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் மும்பை பங்குசந்தை புள்ளிகள் உயர்ந்து வருகின்றனர்.
இன்று மத்திய அரசின் 2021-22ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் தொடங்கவுள்ளது. இந்நிலையில் வார தொடக்க நாளான இன்று மும்பை பங்குசந்தை புள்ளிகள் உயர்வை சந்தித்துள்ளன.
கடந்த சில வாரங்களில் ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வந்த பங்குசந்தையில் தற்போது சென்செக்ஸ் புள்ளிகள் 292 அதிகரித்து 46,578 ஆக உயர்ந்துள்ளது. இன்று பட்ஜெட் அறிவிப்புகளை பொருத்து இந்த புள்ளிகள் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.