செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 4 செப்டம்பர் 2025 (11:01 IST)

ஒரு ரூபாய்க்கு ஒரு சிம்கார்டு.. பி.எஸ்.என்.எல். வழங்கிய அதிரடி அறிவிப்பு..!

ஒரு ரூபாய்க்கு ஒரு சிம்கார்டு.. பி.எஸ்.என்.எல். வழங்கிய அதிரடி அறிவிப்பு..!
பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய இ-சிம் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் இனி சிம் கார்டு இல்லாமலேயே நெட்வொர்க் இணைப்பை பெற முடியும். இந்த சேவை ஆரம்ப சலுகையாக ஒரு ரூபாய் விலையில் வழங்கப்படுகிறது.
 
இந்தச் சேவைக்கான இ-சிம் விலை ஒரு ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை செப்டம்பர் 15ஆம் தேதி வரை மட்டுமே கிடைக்கும்.
 
இ-சிம் பயன்படுத்துவதால், உடனடி நெட்வொர்க் செயல்பாடு, சாதனங்களை மாற்றும்போது சிம் கார்டை மாற்ற வேண்டிய தேவை இல்லாதது, மற்றும் அதிக பாதுகாப்பு ஆகியவை கிடைக்கும்.
 
இ-சிம் அறிமுகத்துடன், புதிய இணைப்பு பெறுபவர்களுக்கும், மற்ற நெட்வொர்க்குகளிலிருந்து எம்.என்.பி. மூலம் பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு மாறுபவர்களுக்கும் ஒரு ரூபாயில் இலவச நன்மைகள் வழங்கும் 'பிரீடம் பிளான்' திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 
இந்த திட்டங்கள் குறித்த கூடுதல் விவரங்களை அருகில் உள்ள பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர் சேவை மையத்திலோ அல்லது அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்திலோ பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran