இந்தியாவை ’ரெட் லிஸ்டில்’ சேர்த்த பிரிட்டன்

corono virus
Sinoj| Last Modified திங்கள், 19 ஏப்ரல் 2021 (22:26 IST)

கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.

இந்நிலையில், டெல்லி, மஹராஷ்டிரா, தமிழ்நாடு, உள்ளிட்ட மாநிலங்கள் அரசு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியுள்ளது.

கொரோனாவின் முதல் அலையை விட இரண்டாம் கட்ட அலை மக்களை அதிகளவில் பாதித்துவருகிறது.

இந்நிலையில்,வெளிநாட்டில் இருந்து பிரிட்டன் செல்லும் பயணிகளுக்கு அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுபபாடுகளை விதித்து வருகிறது.

குறிப்பாக சில நாடுகளை ரெட் லிஸ்டில் வைத்து அந்நாட்டு பயணிகள் பிரிட்டன் வருவதற்குத் தடை விதித்துள்ளது. இந்தியா வருவதாக இருந்த பிரிட்டர் பிரதமர் போரிஸ் ஜான்சனில் பயணம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் அவர் பயணத்தை ரத்து செய்யப்பட்ட உடன் இந்தியாவை அந்நாடு ரெட் பட்டியலில் இணைத்துள்ளது..

அதனால், இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்களைத் தவிய மற்றவர்கள் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்ல அனுமதி கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே இந்த ரெட் லிஸ்டில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் நாடுகள் உள்ளது குறிப்பிடத்தக்கதுஇதில் மேலும் படிக்கவும் :