செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 19 ஏப்ரல் 2021 (18:30 IST)

வாத்தி கம்மிங் பாடல் புதிய சாதனை !

சமீபத்தில் பொங்கலுக்கு ரிலீஸான படம் விஜய்யின் மாஸ்டர். இப்படம் வசூல் ரீதியாக பெரும் சாதனை படைத்தது.

இப்படத்தில் அனிருத் இசையமைத்திருந்த வாத்தி கம்மிங் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. கிரிக்கெட் வீரர்கள், மற்றும் சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலரும் இப்பாடலுக்கு நடனம் ஆடி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

இந்நிலையில், கடந்த 2018  ஆம் ஆண்டு வெளியான மெர்ஷல் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இடம்பெற்ற ஆளப்போறான் தமிழன் பாடல் பெரும் வெற்றி பெற்றது. பல புதிய சாதனைகளை இப்பாடல் படைத்துள்ள நிலையில், இப்பாடலின் சாதனை வெறும் 3 மாதங்களில் முறியடித்துள்ளது விஜயின் மற்றொரு பாடல்.

ஆளப்போறான் தமிழன் பாடல் பதிவேற்றம் செய்யப்பட்ட 3 ஆண்டுகளில் 14 கோடிப் பேர் பார்த்துள்ள நிலையில், வாத்தி கம்மிங் பாடல் 2 மாதங்களிலேயே இச்சாதனையை முறியடித்து 14 கோடி பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.