திங்கள், 26 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 12 செப்டம்பர் 2020 (13:34 IST)

துப்பாக்கி வெச்சு செல்ஃபி எடுக்க முயற்சி! – குண்டு வெடித்து இறந்த சிறுவன்!

துப்பாக்கி வெச்சு செல்ஃபி எடுக்க முயற்சி! – குண்டு வெடித்து இறந்த சிறுவன்!
பீகாரில் துப்பாக்கியை வைத்து செல்பி எடுக்க முயன்ற சிறுவன் குண்டு வெடித்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் கோபாலகாஞ்ச் மாவட்டத்தில் உள்ள 17 வயதான சிறுவன் ஒருவர் 12ம் வகுப்பு முடித்து விட்டு பொறியியல் படிப்பதற்காக நுழைவு தேர்வு எழுதிவிட்டு காத்திருந்துள்ளார்.

இந்நிலையில் உறவினர் ஒருவரின் துப்பாக்கி கிடைக்க அதை வைத்து போஸ் கொடுத்து செல்பி எடுக்க சிறுவன் முயன்ற போது ட்ரிகரில் தவறுதலாக கை பட்டதால் துப்பாக்கி வெடித்ததில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.