வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (12:09 IST)

மதிப்பெண் சான்றிதழா? மன அழுத்த சான்றிதழா? – கல்வி முறை குறித்து பிரதமர் மோடி

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் அதுகுறித்து பிரதமர் மோடி இன்று உரையாற்றியுள்ளார்.

அதில் அவர் “உலகம் முழுவதும் கடந்த 30 ஆண்டுகளில் கல்வி முறையில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் நமது நாட்டில் கல்வி முறை இன்னும் மாறவில்லை. புதிய இந்தியாவின் தேவைக்கு ஏற்ப கல்வி கொள்கையை உருவாக்கியுள்ளோம். இதற்காக பலர் இரவு பகல் பாராது பல ஆய்வுகள் மேற்கொண்டு உழைத்துள்ளனர். புதிய இந்தியாவின் புதிய எதிர்பார்ப்புகளை புதிய கல்விக் கொள்கை பூர்த்தி செய்யும்” என கூறியுள்ளார்.

மேலும் “பள்ளிகளில் அளிக்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்கள் மாணவர்களின் மன அழுத்தத்தை அதிகரித்து மன அழுத்த சான்றிதழ்களாக மாறிக் கொண்டிருக்கின்றன. மாணவர்களின் கல்வி மற்றும் மற்ற திறன்களை வளர்க்க புதிய கல்வி கொள்கை அவசியமான ஒன்று” என தெரிவித்துள்ளார்.