வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 5 பிப்ரவரி 2023 (14:00 IST)

போதைப் பொருள் கடத்திய டிரோனை சுட்டு வீழ்த்திய எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள்

ராஜஸ்தான் எல்லையில் பாகிஸ்தானில் இருந்து போதைப் பொருள் கடத்தி வந்த ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது.

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கா நகர் மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லையில் நேற்று முன் தினம் இரவு எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பாகிஸ்தான் நாட்டில் இருந்து எல்லைக்குள் 6 கிலோ எடை கொண்ட போதைப் பொருட்கள் கடத்தி வந்த ட்ரோனை பிஎஸ்எப் வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.

இதில், ஹெராயின் கடத்தப்பட்டதாக எல்லைப் பாதுகாப்பு படை வீரரக்ள் தெரிவித்தனர்.  இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.