ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 3 நவம்பர் 2024 (10:29 IST)

பைக் டாக்சி புக் செய்து கேன்சல்..! பழிவாங்க பெண்ணுக்கு ஆபாச வீடியோ அனுப்பிய டிரைவர்!

Bike Taxi

கொல்கத்தாவில் பைக் டாக்ஸி புக் செய்து கேன்சல் செய்த பெண் மருத்துவருக்கு ஆபாச வீடியோ அனுப்பிய விவகாரத்தில் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

 

நாடு முழுவதும் போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில் உடனடியாக தனிநபர்கள் பயணத்திற்காக பைக் டாக்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. சமீபத்தில் இந்த பைக் டாக்சி நிறுவனங்கள் புக் செய்தும் நீண்ட நேரம் வாடிக்கையாளர்கள் காத்திருந்து ட்ரிப்பை கேன்சல் செய்தால் பைக் டாக்ஸி ஓட்டுனரின் ஸ்டார் ரேட்டிங்கை குறைப்பது போன்றவற்றை செய்து வருகின்றன.

 

இந்நிலையில் மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் பெண் மருத்துவர் ஒருவர் பைக் டாக்சி ஒன்றை புக் செய்துள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் பைக் டாக்ஸி வராததால் ட்ரிப்பை கேன்சல் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பைக் டாக்ஸி டிரைவர் உடனடியாக பெண் கஸ்டமருடைய எண்ணுக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பியுள்ளார். 

 

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் அந்த இளைஞர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

Edit by Prasanth.K