வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : சனி, 2 நவம்பர் 2024 (13:43 IST)

2 கள்ளக்காதலிகளின் உதவியால் மனைவியை கொலை செய்த இளைஞர்.. அதிர்ச்சி சம்பவம்..!

ஒடிசா மாநிலத்தில் இரண்டு கள்ளக்காதலிகளின் உதவியுடன் மனைவியை கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த குமார தாஸ் என்பவருக்கு சமீபத்தில் சுபஸ்ரீ என்பவருடன் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகு, குமார தாஸ் இரண்டு பெண்களுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுபஸ்ரீ, தனது கணவருடன் சண்டை போட்டு தாய் வீட்டுக்குச் சென்று விட்டார். பின்னர், குமார தாஸ் மனைவியை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வந்தார்.

இந்த நிலையில், சுபஸ்ரீ தூங்கிக் கொண்டிருக்கும்போது குமார தாஸின் இரண்டு கள்ளக்காதலிகள் அவரது வீட்டிற்கு வந்து சுபஸ்ரீக்கு மயக்க மருந்து கொடுத்தனர். தொடர்ந்து அவர் மயக்க மருந்து அளிக்கப்பட்டதால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

முதலில் இது தற்கொலை என குமார தாஸ் தெரிவித்தபோதிலும், காவல்துறையினர் சுபஸ்ரீயின் பிரேதத்தை பரிசோதித்து அதிர்ச்சி அடைந்தனர். அந்த அறிக்கையில், சுபஸ்ரீக்கு தொடர்ச்சியாக சில நாட்கள் மயக்க மருந்து கொடுக்கப்பட்டதும், கண்மூடித்தனமாக தாக்குதல் செய்யப்பட்டதும் தெரிய வந்தது.

இதனை அடுத்து விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், குமார தாஸ் மற்றும் அவரது இரண்டு காதலிகள் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால், இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Edited by Mahendran