வியாழன், 19 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வெள்ளி, 18 அக்டோபர் 2024 (15:25 IST)

ராஷ்மிகா மந்தனாவுக்கு முக்கிய பதவி.. மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்..!

நடிகை ராஷ்மிகா மந்தனா முக்கிய பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
 
சில வருடங்களாகவே நடிகைகள் சைபர் குற்றச்செயல்களால் பாதிக்கப்படுகிறார்கள். சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் டீப் ஃபேக் வீடியோ மூலம் பாதிக்கப்பட்டார் என்பது தெரிந்ததே.
 
இந்த சூழலில், இந்திய சைபர் குற்றப்பயன்முறை ஒருங்கிணைப்பு மையத்தின் தூதராக ராஷ்மிகா மந்தனா நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட ராஷ்மிகா, "சைபர் குற்றங்கள் உலகெங்கிலும் தனிநபர்கள், வணிக நிறுவனங்கள், சமூகங்களுக்கு பேராபத்தாக உள்ளன.
 
நான் இத்தகைய குற்றத்தால் பாதிக்கப்பட்டவராக இருப்பதால், இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மக்களை சைபர் குற்றங்களிலிருந்து காப்பாற்றவும், சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உழைப்பேன்" என்று உறுதியளித்துள்ளார்.
 
மேலும், "சைபர் குற்றத்தால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வை உருவாக்க மத்திய அரசு அளித்த இந்த வாய்ப்புக்கு நன்றி. நாமெல்லாரும் விழிப்புணர்வுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார். 
 
 
 
Edited by Siva