வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 17 அக்டோபர் 2024 (09:55 IST)

நண்பனை பழிவாங்க விமானங்களுக்கு வெடிக்குண்டு மிரட்டல்! - சத்தீஸ்கரில் சிறுவன் கைது!

Flight

சமீபமாக இந்தியாவில் பல விமானங்களுக்கு அடிக்கடி வெடிக்குண்டு மிரட்டல் வந்த நிலையில் பல விமானங்களுக்கு மிரட்டல் விடுத்த சத்தீஸ்கரை சேர்ந்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

 

 

இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் உள்நாட்டு, பன்னாட்டு விமான சேவைகள் நடந்து வரும் நிலையில் சமீபமாக விமானங்களுக்கு போலி வெடிக்குண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இதனால் விமானங்கள் புறப்படுவதில் தாமதம் மற்றும் புறப்பட்ட இடத்திற்கே திருப்பி விடப்படுவதால் பயணிகளும், விமான நிறுவனங்களும் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

 

இதுபோன்று வரும் போலி மிரட்டல்கள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் சத்தீஸ்கரை சேர்ந்த 16 வயது சிறுவன் 3 விமானங்களுக்கு சமூக வலைதளங்கள் மூலமாக மிரட்டல் விடுத்தது தெரியவந்துள்ளது. மும்பை - டெல்லி உள்நாட்டு விமானத்திற்கு சிறுவன் விடுத்த மிரட்டலால் விமானம் அவசரமாக மும்பையில் தரையிறக்கப்பட்டது.
 

 

இதுகுறித்து சிறுவனை விசாரித்தபோது தன்னிடம் பணம் வாங்கிவிட்டு திரும்ப தராத நண்பனை பழிவாங்குவதற்காக அச்சிறுவனின் புகைப்படத்துடன் சமூக வலைதளத்தில் கணக்கு தொடங்கி இதுபோன்ற போலி மிரட்டல்களை விடுத்ததாக சிறுவன் ஒப்புக் கொண்டுள்ளான். நண்பனை பழிவாங்க விமானங்களுக்கு சிறுவன் மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K