திங்கள், 18 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 16 அக்டோபர் 2024 (19:06 IST)

தலைமை தேர்தல் ஆணையர் சென்ற ஹெலிகாப்டரில் பிரச்சனையா? திடீரென தரையிறங்கியதால் பரபரப்பு..!

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பயணம் செய்த ஹெலிகாப்டர், மோசமான வானிலை காரணமாக, உத்தரகாண்ட் மாநிலத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இந்திய தேர்தல் ஆணையம் நேற்று மஹாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய இரண்டு மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதிகளை அறிவித்தது. மகாராஷ்டிராவில் நவம்பர் 20ஆம் தேதியும், ஜார்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 12,20 ஆகிய தேதிகளிலும் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

மேலும், 47 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வயநாடு மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நவம்பர் 13 அன்று நடைபெறும் என தெரிவித்தது.

மேலும், உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் சட்டமன்றத் தொகுதி மற்றும் நந்தத் மக்களவைத் தொகுதிக்கு நவம்பர் 20 அன்று இடைத்தேர்தல் நடைபெறும் எனவும் ஓட்டு எண்ணிக்கை நவம்பர் 23 ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று ஹெலிகாப்டரில் தலைமை தேர்தல் ஆணையர் பயணித்த நிலையில் திடீரென மோசமான வானிலையால் தரையிறக்கப்பட்டது. இதில் தலைமை தேர்தல் ஆணையருக்கும், பிற அதிகாரிகளுக்கும் எந்த பாதிப்பும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.


Edited by Siva