திங்கள், 18 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 16 அக்டோபர் 2024 (12:41 IST)

ஜம்மு காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா பதவியேற்பு.. அமைச்சரவையில் பங்கேற்காத காங்கிரஸ்..!

ஜம்மு காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா பதவி ஏற்ற நிலையில், அமைச்சரவையில் காங்கிரஸ் பங்கேற்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சமீபத்தில் முடிவடைந்த ஜம்மு காஷ்மீர் தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி 42 இடங்களில் வெற்றி பெற்றது. அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆறு இடங்களில் வெற்றி பெற்றது. 
 
இருப்பினும், தேசிய மாநாட்டு கட்சிக்கு நான்கு சுயாட்சி எம்எல்ஏக்கள் ஆதரவளித்ததை அடுத்து, தனியாக ஆட்சி அமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இன்று முதல்வராக உமர் அப்துல்லா பதவியேற்ற நிலையில், காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு தர இருப்பதாகவும், அமைச்சரவையில் பங்கேற்பதில்லை என்று அறிவித்துள்ளது.
 
இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் ஹமீத் கூறியதாவது, "இப்போதைக்கு ஜம்மு காஷ்மீர் அரசு அமைச்சரவையில் காங்கிரஸ் பங்கேற்கவில்லை. ஜம்மு காஷ்மீருக்கு இன்னும் மாநில அந்தஸ்து கொடுக்கப்படவில்லை என்பதால், நாங்கள் அதிருப்தியில் உள்ளோம். மாநில அந்தஸ்தை மீட்டதற்கான காங்கிரசின் போராட்டம் தொடரும்," எனத் தெரிவித்துள்ளார்.
 
 
Edited by Mahendran