திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 16 அக்டோபர் 2024 (17:53 IST)

மாவில் சிறுநீரை கழித்து ரொட்டி செய்த பணிப்பெண்! குடும்பமே மருத்துவமனையில் அனுமதி!

Maid mix urine in the flour

உத்தர பிரதேசத்தில் வீடு ஒன்றில் பணிபுரியும் பெண் அந்த வீட்டாருக்கு சமையலில் சிறுநீரை கலந்து சமைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

உத்தர பிரதேசம் மாநிலம் காசியாபாத் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ரீனா என்ற பெண் சமையல் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்துள்ளார். சமீபத்தில் ரீனா சமைத்து தந்த ரொட்டியை அந்த குடும்பத்தினர் சாப்பிட்ட நிலையில் வாந்தி, தலைசுற்றல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

உணவு ஒவ்வாமை குறித்து சந்தேகம் எழுந்த அந்த குடும்பத்தினர் வீட்டில் உள்ள கேமராவை சோதனை செய்தபோது, அதில் பணிப்பெண் ரீனா ரொட்டி தயாரிக்கும் மாவில் தண்ணீருக்கு பதிலாக தனது சிறுநீரை கலந்து ரொட்டி தயாரிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

இதுகுறித்து உடனடியாக அவர்கள் போலீஸில் புகார் அளித்த நிலையில், வழக்குப்பதிவு செய்த போலீஸார் பணிப்பெண்ணை கைது செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K