செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 19 ஜூன் 2020 (14:12 IST)

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவனின் குடும்பத்திற்கு நிவாரண உதவி: அசத்திய ரஜினி மக்கள் மன்றத்தினர்

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்று திருவள்ளுவரின் திருக்குறளுக்கு ஏற்ப  ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த எட்டாம் வகுப்பு மாணவனின் குடும்பத்திற்கு ரஜினி மக்கள் மன்றத்தினர் நிவாரண உதவி செய்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது
 
நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்த சிறுவனை இன்று காலை கடலூர் போலீசார் கண்டுபிடித்து அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த சிறுவனுக்கு மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளதை அறிந்து அவனை எச்சரித்து அவளுடைய பெற்றோரிடம் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பிவைத்தனர் 
 
இந்த நிலையில் சிறுவனின் தந்தை இதுகுறித்து கூறிய போது ’நானும் பல ஆண்டுகளாக ரஜினி ரசிகனாக இருந்து வருவதாகவும் ரஜினி படங்கள் அனைத்தையும் தவறாமல் பார்த்ததாகவும் கூறினார். மேலும் தனது மனநலம் பாதிக்கப்பட்ட மகன் தெரியாமல் செய்த தவறை ரஜினிகாந்தும் அவருடைய ரசிகர்களும் மன்னிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார் 
 
இந்த நிலையில் திடீரென அவரது வீட்டிற்குச் சென்ற ரஜினி மக்கள் மன்றத்தினர் அரிசி பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கி சிறுவனுக்கும் அவருடைய பெற்றோருக்கு ஆறுதல் கூறிவிட்டு திரும்பி வந்துள்ளனர். இது குறித்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது