செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : வியாழன், 18 ஜூன் 2020 (15:02 IST)

நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். இப்போது இளைய தலைமுறை நடிகர்களுடன் போட்டி போட்டு நடித்து கொண்டிருக்கிறார். கொரோனா பாதிப்புகள் காரணமாக அவர் நடித்து வந்த அண்ணாத்த  படத்தின் ஹூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே சிவா இயக்கத்தின் அப்படம் அடுத்த வருடம் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என தெரிகிறது.

இந்நிலையில்,  இன்று 108 என்ற அவசர எண்ணுக்கு அழைத்து நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் தோட்ட வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதையடுத்து  போலீஸார்  அங்கு சோதனை மேற்கொண்டனர்.  நடத்தப்பட்ட சோதனையில் மிரட்டல் வெறும் புரளி என்று தெரியவந்துள்ளது.