1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 29 டிசம்பர் 2021 (11:43 IST)

ஆட்சிக்கு வந்தால் ரூ.70க்கு மதுபானம்: பாஜக பிரமுகர் வாக்குறுதி!

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 70 ரூபாய்க்கு மதுபானம் தருவோம் என பாஜக பிரமுகர் ஒருவர் வாக்குறுதி அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஆந்திஅ மாநில பாஜக தலைவர் சோமவீர ராஜூ என்பவர் நேற்று கூட்டம் ஒன்றில் உரையாற்றினார். அதில் 2024 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பாஜக ஆட்சியை கைப்பற்றும் என்றும் மக்கள் அனைவரும் பாஜகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்
 
மேலும் ஆந்திர மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் 70 ரூபாய்க்கு மதுபானங்களை விற்போம் என்றும் நிதி இருந்தால் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்றும் அவர் வாக்குறுதி அளித்தார்
 
ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒட்டுமொத்த குடிமகன்களின் வாக்குகளை பெறவே அவர் இவ்வாறு வாக்குறுதி அளித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்