1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 28 டிசம்பர் 2021 (13:55 IST)

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பாஜகவில் இணைந்தார்!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பாஜகவில் இணைந்தார்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஒருவர் பாஜகவில் இணைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
கௌதம் காம்பீர் உள்ளிட்ட ஒரு சில முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பாஜகவில் இணைந்து இருந்த நிலையில் தற்போது தினேஷ் மோங்கியா என்பவர் பாஜகவில் இணைந்துள்ளார்
 
57 ஒருநாள் போட்டிகளிலும் ஒரு டி20 போட்டிகளிலும் விளையாடி உள்ள இவர் கடந்த 2007ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தினேஷ் மோங்கியா பாஜகவில் இணைந்துள்ளார் 
 
அவரை பாஜக தலைவர்கள் வரவேற்று உள்ளனர் என்பதும் விரைவில் நடைபெற இருக்கும் 5 மாநில தேர்தலில் இவர் போட்டியிடுவார் என்றும் கூறப்படுகிறது.