புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 27 டிசம்பர் 2021 (23:05 IST)

இளைஞர்களின் விளையாட்டை ஊக்கப்படுத்த பாஜக நிதி உதவி

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் பிறந்த தினத்தை முன்னிட்டு இளைஞர்களின் விளையாட்டை ஊக்கப்படுத்தும் விதமாக விளையாட்டு திடலை மேம்படுத்த நிதி கரூர் மாவட்ட பாஜக அதிரடி.
 
கரூர் மாவட்ட பாஜக சார்பில், பாரத தேசத்தின் முன்னாள் பிரதமர் திரு வாஜ்பாய் அவர்களின் 97 வது பிறந்த நாளை முன்னிட்டு  பல்வேறு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டது. ஏழை எளியவர்களுக்கு  நலத்திட்டங்கள் வழங்கியதை அடுத்து, கரூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில்  பாரத தேசத்தின் முன்னாள் பிரதமர் திரு வாஜ்பாய் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து அவரது பிறந்த நாள்  கொண்டாடப்பட்டது. இந்நிலையில்,  கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட வீரராக்கியம், சின்னமநாயக்கன் பட்டி கிராமத்தைச் சார்ந்த இளைஞர்களுக்கு விளையாட்டு திடலை மேம்படுத்த ரூபாய் 10 ஆயிரத்திநை பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் V.V. செந்தில்நாதன்  வழங்கினார். என்னை கட்சியில் பாஜக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்