திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 16 ஜனவரி 2023 (12:45 IST)

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தில் திருப்பி அறையுங்கள்: பாஜக பெண் எம்பியின் சர்ச்சை பேச்சு!

bjp mp
உங்களை அறைந்தால் திருப்பி அறையுங்கள்: பாஜக பெண் எம்பியின் சர்ச்சை பேச்சு!
உங்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அறைந்தால் திருப்பி அறைந்தால் என பாஜக பின் எம்பி ஒருவர் கூட்டம் ஒன்றில் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சமீபத்தில் பாஜகவை சேர்ந்த நிர்வாகி ஒருவரின் கன்னத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அறைந்ததாக கூறப்பட்ட நிலையில் இது குறித்து பாஜக பெண் எம்பி  லாக்கட் சாட்டர்ஜி என்பவர் பேசினார். உங்களை யாராவது அறைந்தால் உங்களது குறைகளை கேட்க அவர் விரும்பவில்லை என்றும் அந்த நபரை ஒரு மரத்தில் கட்டி வைத்து திரும்ப அறையுங்கள் என்றும் பேசினா.ர் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது 
 
மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிர் ஆட்சி நடந்து வரும் நிலையில் அதே மாநிலத்தில் இந்த பெண் எம்பி பேசி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கூறிய போது மம்தா பானர்ஜியின் வளர்ச்சி திட்ட பணிகளை பார்த்து பாஜகவுக்கு பயம் வந்துவிட்டது என்று கூறினர்
 
Edited by Mahendran