திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 21 பிப்ரவரி 2018 (10:03 IST)

பயங்கர கார் விபத்தில் பாஜக எம்.எல்.ஏ பரிதாப பலி

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இன்று காலை நடந்த சாலை விபத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் நூர்பூர் தொகுதியில் பா.ஜ.க  எம்.எல்.ஏ.வாக இருந்தவர் லோகேந்திர சிங். இவர் நேற்று இரவு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். இவரது கார் இன்று காலை, சிதாபூர் அருகே சென்றுகொண்டிருந்த போது சாலையின் எதிரே வந்த லாரி மீது  பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் லோகேந்திர சிங் அவருடன் பாதுகாப்பு பணியில் இருந்த இரண்டு போலீசார் மற்றும் கார் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார் இடிபாடுகளில் சிக்கி இருந்த உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.