திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 20 பிப்ரவரி 2018 (19:11 IST)

ஜெ. மருத்துவமனையில் என்னிடம் பேசினார் - சமையலர் ராஜம்மாள் தகவல்

ஜெயலலிதாவை மருத்துவமனையில் அனுமதித்த மறுநாள் தான் சந்தித்து பேசியதாக சமையலர் ராஜம்மாள் விசாரணையில் தெரிவித்தார்.
 

ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணைக் கமிஷன் விசாரிக்கும் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அதன் தொடர்ச்சியாக இளவரசி, விவேக், தீபா என பலரையும் விசாரித்தனர். 
 
இந்நிலையில் இன்று ஜெயலலிதாவின் சமையலர் ராஜம்மாள் விசாரணையில் ஆஜராகி கூறியபோது, நான் ஜெயலலிதா மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட மறுநாள் (செப்.23) அவரை நேரில் சென்று சந்தித்ததாக கூறினார் என விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.