புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 14 நவம்பர் 2019 (09:42 IST)

காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை ஈர்க்க பாஜக திட்டம்? – உஷாரான காங்கிரஸ்!

மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சியுடன் உத்தவ் தாக்கரே பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக – சிவசேனா கூட்டணி வெற்றிபெற்றும் இரு கட்சிகளிடையே உருவான மோதலால் ஆட்சியமைக்க முடியவில்லை. தேர்தலில் கணிசமான வெற்றியை ஈட்டியுள்ள 4 கட்சிகளும் பெரும்பான்மை பெறாததால் ஆட்சியமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சிவசேனாவுக்கு ஆதரவு அளிக்கும்படி உத்தவ் தாக்கரே காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ்க்கு கோரியுள்ளார். அதன்படி தேசியவாத காங்கிரஸ்க்கு ஆட்சியில் சமபங்கும், காங்கிரஸ்க்கு துணை முதல்வர் பதவியும் கிடைக்கும் என கூறப்படுகிறது.

இதுகுறித்து காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருந்தன. ஆனால் நேற்றைய சந்திப்பு சில காரணங்களால் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் நாராயண் ரனே 145 எம்.எல்.ஏக்களின் ஆதரவோடு ஆட்சியமைப்போம் என கூறியுள்ளது பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை தன் பக்கம் இழுக்க பாஜக முயற்சி செய்யும் என கூறப்படுகிறது. பாஜகவின் குதிரை பேரத்திற்கு யாரும் விலை போய்விட கூடாது என காங்கிரஸ் முன்னாள் முதல் மந்திரி பிரிதிவிராஜ் சவான் தெரிவித்துள்ளார்.