செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: புதன், 13 நவம்பர் 2019 (18:58 IST)

ராமர் பற்றி ஆட்சேபகரமான படம்.. கைதான இளைஞர்

இந்து மத கடவுளான ராமர் குறித்து ஆட்சேபகரமான படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி தந்த நிலையில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளது. மேலும் இந்த தீர்ப்பை முன்னிட்டு வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை காவல் துறை கண்காணித்து வந்தது.

இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு இளைஞர், கடவுள் ராமர் குறித்து ஆட்சேபகரமான படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்

முன்னதாக தவறான தகவலை பரப்பியதாக குற்றம்சாட்டப்பட்டு 70 க்கும் மேற்பட்டோர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.